|
முஹம்மது (ஸல்) என்னும் திவ்ய நாமத்திற்கு சீர்த்திப் பெற்றியவர்
புகழப்பட்டவர்– புகழுக்குரியவர் என்னும் ஆழிய பொருள் உண்டு.
அப்பெரும் பெயரின் அர்த்த பாவங்களில் ஆழ்ந்து திளைத்தல் என்பது
நல்லோர் பெறும் தனிப்பேறு. இறைவனின் திருவருள் நிறைந்த குருவருளால்
அத்தீங்சுவையில் ஒரு கோண்பாகம் கண்டுளேன்.
முஹம்மது (ஸல்) என்பது திவ்ய நாமம். ‘திவ்’ என்றால் ஒளி என்று
பொருள் மூலமந்திரத் திருக்கலிமாலின் இருபத்து நான்கு அட்சரங்களும்
நூரீ என்னும் ஒளியெழுத்துக்கள். எனவே, 'முஹம்மது’ (ஸல்)
என்பது ஒளிதிகழ் நற்பெயர் என்பது தெற்றென விளங்கும். அதனாலன்றோ,
தாஜுஸ்ஸலவாத்தில் “இஸ்முஹூ மக்தூபுன் மர்ஃபூஉன் மஷ்ஃபூஉன்
மன்கூஷுன்ஃபில் லவ்ஹி வல் கலம்” என்னும் நனி சால அழகிய கோர்வை.
அவர்களின் திரு நாமங்கள்
(சகல வேதங்களிலும்) குறிக்கப் பட்டதாகவும் லொளவ்ஹ் என்ற விதி வசப்
பட்டோலையிலும் கலம் என்ற எழுது கோலிலும் குறிக்கப் பட்டதாகவும்
திகழ்கிறது.
‘வ குல்ல ஷைஇன் அஹ்ஸைனாஹூ ஃபீ இமாமின் முபீன்’ என்பது
திருக்குர்ஆனில் ஒரு ஸ்லோகபாகம். இதனால் முஹம்மது (ஸல்)
என்னும் செளந்தர்ய நாமம் மக்தூபானது என்பது பெற்றோம்.
‘வரஃபஃனா லக திக்ரக்’ என்று வல்லோனாம் அல்லாஹ் நம் நாயகத்தை நோக்கி
நயந்து கூறினன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் ஐஷ்வர்ய
நாமம் மர்ஃபூவானது என்பது பெற்றோம்.
‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பது திருக்குர்ஆனில் ஒரு ஓதம்
திருக்கலிமாவின் இந்தச் சற்குணபாகத்தின் பொருட்டால் ஆதிபிதா ஆதம் (அலை)
பாவமன்னிப்பென்னும் அகசொஸ்த்தம் பெற்றதறிவோம். இதனால்,
முஹம்மது (ஸல்) என்னும் கற்பக நாமம் மஷ்ஃபூவானது என்பது பெற்றோம்.
‘லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்னும் தாரக மூல
சாராம்ஸ மந்திரத் திருக்கலிமாவை ஏகன் தன் அர்ஷெ முஅல்லாவில் வைர
அச்செனப் பொறித்தனன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் நித்ய – சத்ய
– வித்ய நாமம் மன்கூஷானது என்பது பெற்றோம்.
முஹம்மது (ஸல்) சீர்த்திப் பெற்றியர் கீர்த்தி என்றால் புகழ்.
அதனினும் பெரிது சீர்த்தி. ‘சீர்த்தி மிகு புகழ்’ என்ற
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
|